கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான திரு.P வெற்றிவேல் முன்னாள் எம்எல்ஏ அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. புரட்சித்தலைவி அம்மா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பை பெற்றவர்.
என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். ‘என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன்’ என்று உறுதிபட சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.
துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். ‘வெற்றி…வெற்றி’ என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிற போது எதற்காகவும் கலங்காதே என் உள்ளம் கலங்கி தவிக்கிறது. திரு வெற்றிவேல் அவர்களின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சிய பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…