மக்களவையில் திமுக எம்.பி டீ.ஆர் . பாலு இன்று பேசும் போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் ஓ.பி ரவீந்திரனத்தை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் நான் பேசுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி க்கள் மேஜை தட்டி ஆராவாரம் செய்தனர்..
ஜம்மு காஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. திமுக சார்பில் மக்களவை குழுத்தலைவர் டீ.ஆர்.பாலு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது, குறுக்கிட முயன்ற அதிமுக ஏ.பி ரவீந்திரநாத்தை கை காட்டி இங்கு முதுகு எலும்பு உள்ளவர்களை மட்டும் தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்றும் நீங்கள் தேவை இல்லாமல் பேச வேண்டாம் என்று கூறி இருக்கிறார். உடனடியாக, குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா இப்படி எச்சரிக்கை செய்ய கூடாது என்று கூறி இருந்தார். அதற்கு பதில் அளித்த பாலு , எனக்கு அதிமுக வில் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ரவியிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் பேசியுள்ளார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…