Sellur K Raju (File photo | EPS)
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயரதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றிதான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தை, இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை, இது தானா சேர்ந்த கூட்டம். மதுரை அதிமுக மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கூடாத கூட்டம் கூடியுள்ளது. அதிமுகவுக்கு கிடைத்த இதயக்கனி எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார். திமுக குறித்து பேசுகையில், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள், இப்போது என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வு ரத்து செய்யமுடியாது என தெரிந்திருந்தும் திமுக நாடகம் ஆடுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அரைத்த மாவை அரைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல என்று கூறினார். மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது, கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவுக்கு கட்டம் சரியில்லை. எங்கே போனாலும் அவர்களுக்கு இடிக்கிறது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடக்கும்போது, காலில் சரக் சரக் என தீ பரவுவது போல மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மைக்கில் பேசுகையில், கணீர் கணீர் என பேசி பின்னி எடுத்துவிட்டார் எனவும் கூறினார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…