உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – அண்ணாமலை

உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று என முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்.
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மீண்டும் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தமிழக அமைச்சராக இருக்கும் திரு செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சராக இருக்கும் திரு செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி.
உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
அறிக்கை:…
— K.Annamalai (@annamalai_k) May 17, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025