கர்நாடகாவில் முழு அடைப்பு: எல்லையோர மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு!

Published by
கெளதம்

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பி-களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் ஆணையிட்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாகவே  பல்வேறு கருத்து மோதல்கள் அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு தொடர் கோரிக்கை வைத்து வருகிறது.

அனால் கர்நாடக அரசு, காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது, அங்கு முழு அடைப்பை ஒட்டி, பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில், கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான 4 தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, தருமபுரி, ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்.பி-க்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து குறித்த சந்தேகங்களுக்கு 9498170430, 9498215407 தொடர்பு கொள்ளலாம்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago