நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

ஸ்விக்கி, சொமேட்டோ பெரும் கமிஷனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவு வழங்கப்படாது என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Swiggy - Zomato - issue

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில், கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் நாளை (ஜூலை 1) முதல் சென்னையில் இவ்விரு நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உணவகங்களிடம் இருந்து சராசரியாக 30% வரை ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் கமிஷன் வசூலிப்பதாகவும், சற்று பெரிய உணவகமாக இருந்தால் விளம்பர கமிஷன் என்று கூறி 40% கூட கமிஷன் வசூலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டும் இல்லாமல், ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் உணவுகளுக்கான தொகை ஒரு வாரம் கழித்தே உணவகங்களுக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும், டெலிவரி நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கமிஷன் தொகை போக, தாங்கள் பெறும் தொகையில் லாபமே இல்லை என உணவகங்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல்லில் கமிஷன் தொகையை முறைப்படுத்தும் வரை டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்படாது என உணவகங்கள் அறிவித்துள்ளது. நாமக்கல்லைப் போலவே, சென்னையிலும் கமிஷன் தொகையை முறைப்படுத்தக் கோரி உணவக உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்