INDIA will Win : இந்தியா வெற்றி பெரும்.! உலக கோப்பையுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் .!

Published by
மணிகண்டன்

வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் 13வது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த முறை உலக கோப்பையை முதன் முறையாக இந்தியாவில் மட்டுமே நடைபெற உள்ளது. சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 10 நகரங்களில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் நடப்பு செம்பியனான இங்கிலாந்து, இந்தியா , ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் , நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதனை முன்னிட்டு உலக கோப்பையானது  மேற்க்கண்ட நாடுகளில் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.

ஒவ்வொரு நாடாக காட்சிப்படுத்தப்பட்ட உலக கோப்பை தற்போது சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டு INDIA Will Win எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று இந்தாண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் எனவும், மற்றொன்று, திமுக அங்கம் வகிக்கும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி வெல்லும் எனவும் முதல்வர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது போல உள்ளது என கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தான் இந்திய அணி தனது முதல் 2023 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

6 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

8 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago