தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்க உள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.எனவே வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .
இந்நிலையில் திருச்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.அதன் பின்னர் அவர் பேசுகையில், வல்லுநர்களுடனான ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…