கொரோனா காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும் -மு.க.ஸ்டாலின்

Published by
Venu

ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்? என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை”, “அப்படிச் செலுத்தத் தவறினால் 16-ஆவது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது.

ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், “அபராதம்” விதிக்கும் கெடுபிடியும் – ஊக்கத் தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!

எனவே, கொரோனா பேரிடர் பாதிப்புகளை மனதில் வைத்து, ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஊக்கத் தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்த பட்சம் 45 நாட்களாக உயர்த்தி – அரையாண்டு வரி 5000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத் தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.அதேபோல் தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu
Tags: #MKStalin

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

18 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

51 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

51 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago