கொரோனாவால் மறைந்தது வேதனையை அதிகமாக்குகிறது – டிடிவி தினகரன் இரங்கல்

Published by
Castro Murugan

திமுக எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் இறப்புக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை  காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த இரு நாட்களாக அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில், இன்று காலை 8.05 மணி அளவில் ஜெ.அன்பழகன் காலமானார்.இந்நிலையில் ஜெ.அன்பழகன் இறப்புக்கு  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் .அந்த இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பது.

டிடிவி தினகரன் இரங்கல் செய்தி:

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Published by
Castro Murugan

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

9 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

11 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

13 hours ago