சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, நேற்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர்பேசிய, அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன என கூறினார்.
மேலும், கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…