தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று தமிழக பா.ஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சித்து, சுரேந்திர நடராஜன் என்பவர் கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இவரது பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத, அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும்.தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்த சஷ்டி கசவம், ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும், தினசரி ஒலிக்கும், சிறந்த பக்தி பாடலாகும்.
முருக பக்தர்களை எல்லாம் அவமானப்படுத்தும் நோக்கில், சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல் திட்டமிட்டு செயல்படுகிறது.அவரை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன் 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு முருகப்பெருமான் படம் மற்றும் கொடியுடன் கண்டன போராட்டம் நடத்த வேண்டும்.
இது போல தமிழகத்தில் இருக்கின்ற கோடிக்கணக்கான முருக பக்தர்களும் இறை நம்பிக்கை உள்ள அனைவருமே அவரவர் வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்த வேண்டும்.முருக பக்தர்களின் மனம் புண்படும் வகையில் செயல்படுவோர்கள் யாருடைய பின்புலத்தில் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில் பா.ஜக உறுதியாக நிற்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…