கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மூன்று பருவமாக பயணாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ரூ.6000 கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தபோது, கிசான் திட்டத்தில் சுமார் ரூ.110 கோடி மோசடி நடைபெற்று உள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.32 கோடி பணம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. கொரோனா நிதி தருவதாக கூறி ஆதார் எண்ணை பெற்று அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி மோசடி நடந்துள்ளது. முறைகேடு தொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை என்றும் கூறியுள்ளார். கணினி மையங்கள், இடைத்தரகர்கள் கூட்டாக செயல்பட்டு மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது. கிசான் திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் முழு பணமும் திரும்ப பெறப்படும். உண்மையான விவசாயிகள் ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…