Kodanad Case : கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இன்னும் கால அவகாசம் தேவை.! நீதிமன்றத்தில் சிபிசிஐடி கோரிக்கை.!

Published by
மணிகண்டன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர், 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தார். காவலாளி கொலை  அதன் பிறகான கனகராஜ் கொலை, முக்கிய ஆவணங்கள் கொள்ளை என மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்த இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக நீலகிரி மாவட்டம் உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காவல்துறை விசாரித்து வந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று நீதிமன்றத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.  தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் இதுவரை 167 சாட்சியத்திடம் விசாரணை நடத்தபட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், செல்போன் தகவல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய வேண்டியுள்ளது என கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

இதனை அடுத்து, உதகை முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

4 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

5 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

5 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

6 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

7 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

8 hours ago