[Image source : India Today]
கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 23க்கு ஒத்திவைத்தது உதகை அமர்வு நீதிமன்றம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான உதகை கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காவலாளி 11 பேர்கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் அதே ஏப்ரல் மாதம் 28இல் விபத்தில் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னதாக சந்தித்த எடப்பாடி ஜோதிடர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக இருந்த சசிகலா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த வழக்கு விசாரணை விவரங்கள் கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதனை அடுத்து இன்று இந்த வழக்கு விசாரணையில், வழக்கின் விசாரணை வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…