இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் நிதிஷ்குமாரை கண்டிக்கவில்லை – வானதி சீனிவாசன்

நேற்று பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு தற்போது உள்ள பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு உள்ளது.
படித்த பெண் திருமணம் செய்யும்போது போது கருவுறுதலை தடுப்பதற்கான வழிகளை கணவருக்குசொல்லி கொடுக்க முடியும். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு பெண்களின் கல்வியறிவு தான் காரணம் என கூறினார்.
பெரியார் சிலை விவகாரம்.. அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்.!
இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசும் போலாக மாறியது. இந்த நிலையில், நேற்று சட்டசபையில் பீகார் முதல்வர் அவர்கள், எனது கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. என் வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன். நான் சொன்னதை எல்லாம் திரும்பப் பெறுகிறேன். நான் பெண்களின் கல்வி குறித்து மட்டுமே பேசினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறுகையில், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்களை பெருமைப்படுத்தி வருகின்றார். ஆனால், நிதிஷ்குமாரின் கருத்துக்கு பதில் சொல்லாமல் இந்தியா கூட்டணியினர் மௌனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுக பெண்களை அவமதித்து வருகிறது என குற்றம்சாட்டியுளளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025