சென்னை:மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு,ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் எனவும்,எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.
இந்நிலையில்,ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் எனவும்,எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின்அவர்கள் உறுதியளித்து உள்ளார்.மேலும்,இது தொடர்பாக,முதல்வர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என முழங்கித் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாகக் கொடுத்து இந்தித் திணிப்பை எதிர்த்த வீரமறவர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தினேன்.அனைத்தும் நமக்குச் சமம்.ஆதிக்கம் எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…