தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான மனுதாக்கல் நிறைவுபெற்றுள்ளது .தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகின்றது.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…