Vairamuthu [Image source : L Hong To Rtai]
கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என 38 படைப்புகளை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், 39-ஆவதாக மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி ‘மகா கவிதை’ என்ற 5 எழுத்துக்களில் உள்ள 5 உள்ளடக்கத்தை கண்டறிந்தால், ஒரு எழுத்திற்கு ஒரு லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 5 எழுத்துக்களின் உள்ளடக்கங்களையும் mahaakavithai.vairamuthu@gmail.com என்ற இ-மெயிலுக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் பரிசு வெல்லுபவர்களுக்கு, ரூ.5 லட்சம் பரிசை விழா மேடையில் வைத்து வழங்குவோம் என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…