சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதையாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீபெரம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையை அடுத்து சிக்கராயபுரத்தில் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள் விரும்பினால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதா என்ற ஒருவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்தவர் சசிகலா. இன்றைக்கு வேண்டுமானால் அதை யாரும் இல்லை என்று சொல்லலாம், மறுக்கலாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், சசிகலாவுக்கு ஒரு தனி வாழ்கை கிடையாது, அதுதான் உண்மை. சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆதாயம் பெற்றவர்கள் கூட சசிகலாவை வேண்டாம் என்று சொல்லுவது மனதிற்கு கடினமாக இருக்கு. சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் ஒரு பெண்ணாக அந்த பெண்ணுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…