police handcuffs [File Image]
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், கருணாபுரம் மக்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் ஆந்திராவில் இருந்து ‘மெத்தனாலை’ கைமாற்றி விட்டது தொடர்பாக மரக்காணத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 40க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே, கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான விஷச் சாராய வியாபாரி கோவிந்தராஜ், சகோதரர் தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகிய 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் எடுக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…