காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என்ற கர்நாடக முதாவார் எடியூரப்பாவின் அறிவிப்பிற்கு கேப்டன் விஜயகாந்த் கண்டனம்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேகதாது அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம், மேகதாது அணை திட்டத்தை திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிவித்தார்.
கார்நாடக முதல்வர் எடியூரப்பாவின் இந்த கருத்துக்கு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீ மன்றத்த தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…