கள்ளச்சாராயத்தில் மெத்தனால்..! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் – முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்ததால் வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் வியாபாரிகள் மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சமயத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு 4 உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி. எவே வேலு, செஞ்சி மஸ்தான், அன்பரசன் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றவர்கள், அதில் மெத்தனால் எரிச்சாரயம் பயன்படுத்தி உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அனைவரும் கைது செய்யப்படுவர்.  குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை அடைத்து விற்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

30 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

1 hour ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago