appavu [Imagesource : Deccanherald]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, இன்று கூடும் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பேரவை தலைவரிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…