SenthilB Case j [DTnext]
கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் ஜூலை 17 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனே செந்தில் பாலாஜி ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ள நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…