சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஔவையாரின் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு 12 மணிக்கும் பெண்கள் நகைகளை அணிந்து பாதுகாப்பாக உலாவலாம் என்றும் கூறினார். மேலும் கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கொரோனா குறித்து பொதுமக்கள் வீணாக பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…