பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சமீபத்தில் புளியந்தோப்பு குடிசை வாரியத்தின் கட்டடம் தரமற்ற நிலையில் கட்டி இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் விளைவாக ஐஐடி குழு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கவுதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, இக்கட்டடத்தின் நிலை மற்றும் தரம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 14 மாடிகள் கொண்டது. மொத்தமாக 840 குடிசை மாற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் 406 சதுர அடிகொண்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…