ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பொதுவாக தேர்தல் நடைபெறும்போது சில சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். அதில் ஓன்று ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவார்கள்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் இருவரும் அவர்கள் கணவருடன் வந்து ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…