மதுரையில் உள்ள ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி ஆவார்.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன் அஜித்குமார் ஆவார்.
இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.மேலும் அஜித் குமார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தும் கஞ்சா ,மது என போதையில் வந்து தகராறு செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
மேலும் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றிவரும் அஜித்குமார் ,கூலி வேலை பார்த்துவரும் தனது தாயார் சரோஜாவிடம் மது குடிக்க காசு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வீட்டை சுற்றியுள்ள அனைவரிடமும் கடன் வாங்கி செலவு செய்து வந்த அஜித்குமாரை சரோஜா கண்டித்துள்ளார்.இதனால் கோபமடைந்த அஜித்குமார் சரோஜாவிடம் 2 நாளாக தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சரோஜா வீட்டில் வாங்கி வைத்திருந்த மண்ணெண்னையை
அஜித் குமார் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.இதனால் அலறிய அஜித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அகால மரணமடைந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு சரோஜாவை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பெற்ற தாயே மகனை தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…