தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்ற நாகசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்வீட்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி. மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இவர் நேற்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்களால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள்.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…