Edappadi - stalin [File Image]
ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி கே. பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது X தள பக்கத்தில், மக்களின் துன்பங்கள் விலகி இன்பம் பெருகவும், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் வழங்க வாழ்த்துகள். மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது X தள பக்கத்தில், மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…