என்எல்சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது தொழிலார்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், புதிய ஊதியம் மற்றும் படிகள் வழங்க குழு ஓன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் உணவு, வீட்டு வாடகை சலுகை படியும் வழங்கப்படும். ஊதிய உயர்வு பலன் நடப்பாண்டு ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் எனவும், புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை வரும் டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உயர்வால் பல்வேறு தொழிலகங்களில் வேலை செய்து வரும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…