சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை -பிரேமலதா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Published by
Venu

சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  சசிகலாவிற்கு   சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.   இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

அண்மையில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது. அபராதத்தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி  27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது.

இதனிடையே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிற்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இன்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவால் பதவி பெற்றவர்கள் என்று கூறினார்.இந்நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களானோம் .வரலாறு தெரியாமல் பிரேமலதா எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியாது.அவர்கள் கட்சி விவகாரம் குறித்து பேசுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

28 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

1 hour ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago