ஒடிசா ரயில் விபத்து… மிகுந்த வேதனைக்குள்ளானேன்; எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

EPS OdishaTrainAccident

ஒடிசா ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோரவிபத்து குறித்து செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், ஒடிசா ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அதிலும் தமிழகத்தைச்சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து மிகவும் சொல்லமுடியாத துயரத்திற்கு உள்ளானேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்துகொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். <

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்