தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முதலிப்பட்டி சார்ந்தவர் பாண்டி(61).இவர் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஊருக்கு வெளியே பாண்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது 13 வயது மதிப்புதக்க மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வந்து உள்ளார்.
அந்த சிறுமியை பார்த்த பாண்டி சிறுமியிடம் பேசி அவரை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.பின்னர் அந்த சிறுமியை பாண்டி தனது வீட்டுக்கு கடத்தி சென்று உள்ளார்.
இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டனர். அப்போது பாண்டி அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதை தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் பாண்டி மீது பலாத்காரம் செய்ததாகவும் , கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமார் சரவணன் பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…