ragupathy [Imagesource : Evt]
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. தமிழக அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்தது. தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் குறிப்பிடுகையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் படித்த இளைஞர்கள், தினக்கூலி வேலையாட்கள் என பலர் பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்து இருந்தது.
ஆன்லைன் ரம்மி சாத்தானுக்கு இனியும் இளைஞர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது – அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் அதிர்ஷ்ட ஆன்லை விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும். ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்து இருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், ரம்மி, போக்கர் விளையாட்டில் தான் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…