[File Image]
தமிழ்நாட்டில் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதுபோன்று, கல்லூரி மாணவர்களும் கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற முக்கிய இடங்களுக்கும், பெங்களூருக்கும் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எனவே, மொத்தம் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…