ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?
இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் வெற்றி பெற்றால் பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகள் பிளே ஆப்புக்கு செல்லும்.

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது.
ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. தற்போது புள்ளிகள் பட்டியலில் 15 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் அணி ஏற்கனவே வெளியேறி விட்டதால், இப்போட்டியை வென்று பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க பஞ்சாப் அணி முயற்சிக்கும். அதேபோல், இன்றைய போட்டியில் குஜராத் அணி வென்றால், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதாவது, பஞ்சாப் மற்றும் குஜராத் வெற்றி பெற்றால் பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகள் பிளே ஆப்புக்கு செல்லும். இன்று எந்த அணி வெற்றி பெறும்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே, நடப்பு சீசனின் தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, பெங்களூர் அணி முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில், பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வென்றாலோ, அல்லது டெல்லி அணியை குஜராத் அணி வென்றாலோ, ஆர்சிபி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இல்லையேல், பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், நடப்பு சீசனில் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறும் முதல் அணி ஆர்சிபி ஆகத்தான் இருக்கும்.