“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!
தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, தங்கள் மாவட்டங்களில் உள்ள சாலையோர கிணறுகள், பள்ளங்கள் மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடிய இடங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த இடங்களைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்மொழிய வேண்டும். பின்னர், அந்த ஆய்வு அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தலைமைச் செயலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.