தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!
தஞ்சையில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி குடோனில் அனுமதியின்றி வெடி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தம் கேட்ட நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 18 வயது இளைஞர் ரியாஸ், சுந்தர்ராஜ் (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்தக் கிடங்கு முறையான அங்கீகாரம் இல்லாமல் இயங்கியதாகவும், இந்த வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அனைத்தனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் மற்றும் கிடங்கின் சட்டவிரோத செயல்பாடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.