ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி குடோனில் அனுமதியின்றி வெடி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தம் கேட்ட நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 18 வயது இளைஞர் ரியாஸ், சுந்தர்ராஜ் (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]