இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், சில நிமிடங்களிலேயே தோல்வியடைந்தது.

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat- 1B) எனும் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி-சி61 (PSLV-C61) ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இன்று அதிகாலை 5.59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இது இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஆகும், இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு பிரியும் பொழுது எந்தவித கோளாறும் இல்லாமல் சென்ற நிலையில், ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
🚀 LIFTOFF!
ISRO’s 101st launch mission takes flight aboard PSLV-C61
📺 Watch Live Streamhttps://t.co/JTNzdc1own
More information: https://t.co/cIrVUJxKJx#ISRO #ISRO101
— ISRO (@isro) May 18, 2025
இஸ்ரோ கூற்றுப்படி, பல்வேறு துறைகளுக்கு பயன்படும் வகையில் தொடர்ச்சியான மற்றும் நம்பகமான தரவை வழங்கும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது. பூமியில் எந்த இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கேமராவை கொண்டது இந்த செயற்கைக்கோள். இதன்மூலம், சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உண்டாகும் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
Today 101st launch was attempted, PSLV-C61 performance was normal till 2nd stage. Due to an observation in 3rd stage, the mission could not be accomplished.
— ISRO (@isro) May 18, 2025