சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்ரோவின் வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் முக்கிய செயற்கைக்கோள் ஏவுதல்கள் குறித்து விரிவாகப் பேசினார். நாராயணன் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவற்றில் புவி கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, மற்றும் அறிவியல் […]
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2025 டிசம்பரில் வியோம்மித்ரா என்ற மனித உருவ ரோபோவை விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிடப்பட்டது. இது குறித்து அவர் பேசியதாவது ” நிலாவில் […]
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat- 1B) எனும் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி-சி61 (PSLV-C61) ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இன்று அதிகாலை 5.59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஆகும், இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு பிரியும் பொழுது எந்தவித கோளாறும் இல்லாமல் சென்ற நிலையில், ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் […]
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் […]
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14, -ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகப் பணியாற்றுவார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் திரு சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக ஒரு தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் தற்போது, வி. நாராயணன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் […]