சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!
வரும் 30-ம் தேதி இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரித்த GSLV F-16 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2025 டிசம்பரில் வியோம்மித்ரா என்ற மனித உருவ ரோபோவை விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிடப்பட்டது.
இது குறித்து அவர் பேசியதாவது ” நிலாவில் இறங்கி மாதிரிகளை கொண்டு-வரும் சந்திராயன் 4 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமையும். வரும் 30-ம் தேதி இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரித்த GSLV F-16 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும். சந்திராயன் 5 திட்டம் இந்தியா- ஜப்பான் இணைந்து செய்ய கூடியது. இது 100 நாள் செயல்பட கூடியது. 55 செயற்கோள்கள் நமக்காக பயன்பட்டு கொண்டு இருக்கிறது. 4 ஆண்டுகளில் இவற்றை 3 பங்காக மாற்றிட செயலாற்றி கொண்டு இருக்கிறோம் ” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த ஜனவரி 26-ஆம் தேதி ஆதித்யா எல் 1 செயற்கோள் பூமியில் இருந்து 1.5 கிலோ கொண்டு விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி ஹை ஹராடிக் டேட்டா அறிவியல் டேட்டா சூரியனை ஆராய்ச்சி செய்த டேட்டாக்க்ள் வந்து உள்ளன. இந்த டேட்டாக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்” எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத்தை சாத்தியமாக்கும் ககன்யான் திட்டம், மூன்று மனிதர்களை 400 கி.மீ உயரத்தில் உள்ள புவி வட்டப் பாதையில் மூன்று நாட்கள் பயணிக்க வைத்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2025 டிசம்பரில் வியோம்மித்ரா ரோபோவை ஏற்றிச் செல்லும் முதல் மனிதரற்ற பயணம் நடைபெறும், அதைத் தொடர்ந்து 2026-ல் மேலும் இரண்டு மனிதரற்ற பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
வியோம்மித்ரா, இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட பெண் உருவ மனித உருவ ரோபோ ஆகும், இது விண்வெளி பயணத்தில் மனித உடலின் பதில்களைப் பிரதிபலிக்கவும், கட்டுப்பாட்டு பலகைகளை இயக்கவும், குழு தொகுதியின் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ, மனிதர்களை அனுப்புவதற்கு முன் அனைத்து அமைப்புகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் சோதிக்க உதவும்.
இந்தத் திட்டத்திற்காக, இஸ்ரோவின் மனித மதிப்பீடு செய்யப்பட்ட எல்.வி.எம்-3 ராக்கெட் பயன்படுத்தப்படும். முதல் மனித பயணத்தில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு விமானிகளான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மனித விண்வெளி பயணத்தை சுயமாக நடத்தும் நான்காவது நாடாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.