தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்

மலேசியா : தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி, அன்வர் இப்ராஹிம் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையைத் ‘ தொடர்ந்து எந்த நிபந்தனையுமின்றி இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாகவும், 200,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, ஆசியான் அமைப்பின் தலைவராக இருப்பதன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்தது, மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்றவையாகும், அவர் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பதற்கு முன் மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த உடன்பாட்டை “நல்ல நம்பிக்கையுடன்” செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் நாளை ஜூலை 29, 2025) இராணுவத் தளபதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மோதல்கள், பிரஹ் விஹார் மற்றும் தா மோன் தோம் கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு, பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது எல்லைகள் வரையப்பட்டதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீடித்து வரும் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.