குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?
தலைவன் தலைவி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த ஜூலை 25, அன்று திரையரங்குகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் எவ்வவு கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள் வார இறுதியில் (ஓப்பனிங் வீக்எண்ட்) 24 கோடி ரூபாய் வசூலித்து பம்பர் தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த ரொமான்டிக் ஆக்ஷன் காமெடி படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 5.65 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 8.10 கோடி ரூபாயும் வசூலித்து, மூன்றாம் நாள் மாலை வரை மொத்த வசூலை 24 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்திற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்தின் 3 நாள் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது. 30 -40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் இந்த படம் இன்னும் சில நாட்களில் பட்ஜெட்டை தாண்டி வசூல் ஆகி தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கும் படமாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திரைப்படம் உலகளவில் 1000 திரைகளிலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் 600 திரைகளிலும் வெளியிடப்பட்டது. 35 கோடி ரூபாய் வசூல் செய்தால் இந்தப் படம் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என்று பாக்ஸ் ஆஃபீஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தற்போதைய வசூல் வேகம், மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதையும், குடும்ப பார்வையாளர்களை ஈர்ப்பதையும் காட்டுகிறது.
இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ, விஜய் டிவி, மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகியவை படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளைப் பெற்றுள்ளன. வார இறுதி வசூல் வலுவாக இருந்தால், இந்தப் படம் 2025-ல் தமிழ் சினிமாவின் முதல் ஐந்து வெற்றி படங்களில் ஒன்றாக இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.