ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!
ஜடேஜாவும் வாஷிங்டனும் சதம் அடிக்கக் கூடாது என்பதற்காக ஸ்டோக்ஸ் இப்படி நடந்துகொண்டார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், ரவீந்திர ஜடேஜா (89*) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (80*) ஆகியோர் சதத்தை நெருங்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியை ட்ரா செய்யலாம் எனக் கூறி கைக்குலுக்க முன்வந்தார்.
ஆனால், ஜடேஜா, “அதெல்லாம் முடியாது, போய் பந்து வீசு,” என ஸ்டோக்ஸின் முடிவை நிராகரித்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டோக்ஸ், ஜடேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஸ்டோக்ஸ் ஹாரி புரூக்கை பந்துவீச அழைத்து, முழு டாஸ் உள்ளிட்ட எளிய பந்துகளை வீசச் செய்தார்.
போட்டியில், இந்திய அணி 386/4 என்ற நிலையில் 75 ரன்கள் முன்னிலையுடன் இருந்தபோது, ஜடேஜாவும் வாஷிங்டனும் 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து வெற்றி பெறுவதைத் தடுத்தனர். ஜடேஜா தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தையும், வாஷிங்டன் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் புரூக்கின் பந்துவீச்சில் அடித்து, இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்றினர். ஸ்டோக்ஸின் இந்த நடவடிக்கையை, “விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரானது,” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், சிலர் “ஜடேஜாவும் வாஷிங்டனும் சதம் அடிக்கக் கூடாது என்பதற்காக ஸ்டோக்ஸ் இப்படி நடந்துகொண்டார். இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல,” எனவும் கூறிகொண்டு வருகிறார்கள். இப்படியான விமர்சனங்கள் எழுந்தவுடன் போட்டிக்கு பிறகு பேசிய ஸ்டோக்ஸ், “எனது முதன்மை பந்துவீச்சாளர்களை காயத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை,” என விளக்கினார்.
அடுத்ததாக ட்ரா செய்ய ஸ்டோக்ஸ் விரும்பியும் எதற்காக ட்ரா செய்யவில்லை என இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது . அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள், அவர்களுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை வழங்க விரும்பினோம்,” என ஆதரவு தெரிவித்தார்.
pic.twitter.com/TEPfjQBXcY Ben Stokes wanted to call it a day, but Jadeja said not yet. Centuries first, handshake later.
— Nikkhil (@nikkhilbk) July 28, 2025