[Image Source : puthiya thalaimurai ]
எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை மறுநாள் தஞ்சாவூர் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், பயணத்தில் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 4.5.2023 அன்று, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும்; அதனைத் தொடர்ந்து, பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. இரா. துரைக்கண்ணு அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்பதாக இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, 15.5.2023 திங்கட் கிழமை அன்று, கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும்; அதனைத் தொடர்ந்து, பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், மறைந்த திரு. இரா. துரைக்கண்ணு அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…