அதிமுக என்ற பெயரை கூட பயன்படுத்த ஓபிஎஸ் தரப்புக்கு உரிமையில்லை – ஜெயக்குமார்

Published by
லீனா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது என ஜெயக்குமார்  பேட்டி.

 ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் தேர்வினை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது. போஸ்டரில் கூட அதிமுக என்ற பெயர் கட்சியின் சின்னம் கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. அந்த உத்தரவை எல்லாம் மீறி சட்டத்தை நாங்கள் மதிக்க மாட்டோம் சட்டம் என்ன செய்யும் என்ற வகையில் தான்தோன்றித்தனமாக ஓபிஎஸ் மற்றும் தரப்பினர் கட்சியின் கொடி சின்னம் பெயர் போன்றவற்றை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேண்டுமென்றே சட்ட ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

6 minutes ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

26 minutes ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

35 minutes ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

1 hour ago

பிரதமர் மோடியே வரவேற்று 3 கோரிக்கைகளுடன் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி.!

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…

2 hours ago

கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் அரசு விழாவாக ஜூலை 23…

2 hours ago