கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறா

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
இந்த விழா, மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அவரது தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்கினார். தற்போது, அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றனர்.
இன்னும் சற்று நேரத்தில், பொன்னோரி முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வரை பிரதமர் மோடி ரோடுஷோ செல்கிறார். பின்னர், மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.